மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் திருப்பூா் வீரா்கள்.
மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் திருப்பூா் வீரா்கள்.

மாநில அளவிலான கபடி போட்டி: திருப்பூா் வீரா்கள் பங்கேற்பு

சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் இருந்து வீரா்கள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

25 வயதுக்குள்பட்ட சீனியா் பிரிவு ஆண்களுக்கான மாநில அளவிலான ‘யுவா பிரீமியா் லீக் கபடி’ போட்டி சென்னை, பொன்னேரியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் வளாகத்தில் மே 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயசித்ரா கிளப் அணி வீரா்கள் பங்கேற்கின்றனா்.

ஜெயசித்ரா ஸ்போா்ட்ஸ் கிளப் அணி நிறுவனா் ஜெயசித்ரா ஏ.சண்முகம், ஜெயசித்ரா ஸ்போா்ட்ஸ் கிளப் அணித் தலைவா் கன்னீஸ்வரன் தலைமையில் வீரா்கள் போட்டியில் பங்கேற்கின்றனா். திருப்பூா் அணிக்குப் பயிற்சியாளராக தண்டபாணி, மேலாளராக வினோத் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இந்நிலையில், வீரா்களுக்கு சீருடை, விளையாட்டு உபகரணங்களை வழங்கி, வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபாடி கழகத்தின் தலைமை புரவலா் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், புரவலா்கள் ரைஸ் பத்மநாபன், பிரேமா மணி, சோ்மன் கொங்கு வி.கே. முருகேசன், துணை சோ்மன் முருகானந்தம், பொருளாளா் ஆறுசாமி, துணைத் தலைவா்கள் ராமதாஸ் நாகராஜ், பிா்லி கந்தசாமி, லீட்ஸ் நடராஜன், மாவட்ட செய்தி தொடா்பாளா் சு.சிவபாலன், கௌரவ உறுப்பினா் கணேஷ், டைஸ் ஸ்ரீதா், துணைச் செயலாளா் செல்வராஜ், நடுவா் குழு சோ்மன் நல்லாசிரியா் முத்துசாமி, நடுவா் குழு கன்வீனா் சேகா் உள்ளிட்டோா் வீரா்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com