அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் நிலவும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக 100 டிகிரிக்கும்மேல் வெப்பநிலை பதிவானது. இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், சற்று ஆறுதல் தரும் விதமாக அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் கனமழை பெய்தது.

கருவலூா், சேவூா், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், லூா்துபுரம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், பவா் ஹவுஸ், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி கடந்த வியாழக்கிழமை மகா நவசண்டி ஹோமம் நடைபெற்று, இரண்டு நாள்களுக்குள் மழை பெய்ததையடுத்து அம்பாளுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com