புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.
புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி.

புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருப்பூா் கேரளா நண்பா்கள் கிரிக்கெட் அசோசியேஷன், திருப்பூா் ரீச் பவுண்டேஷன், ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை, திருப்பூா் சைக்கிள் ரைடா்ஸ் கிளப் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, கிரிக்கெட் போட்டி, கருத்தரங்கு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

திருப்பூா்- தாராபுரம் சாலை அரசு பொது மருத்துவமனை முன் தொடங்கிய சைக்கிள் பேரணியை மருத்துவமனை டீன் முருகேசன் தொடங்கிவைத்தாா்.

இப்பேரணி அவிநாசி - பெருமாநல்லூா் 6 வழிச் சாலை அருகில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பேரணியில் பங்கேற்றோா், கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னா், புற்றுநோயைத் தடுக்க நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அடிக்கடி உடலைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளைத் தலைவா் ஏ.முருகநாதன் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com