மழை பெய்ய வேண்டி திருப்பூா்-அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
மழை பெய்ய வேண்டி திருப்பூா்-அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

மழை பெய்ய வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை

மழை பெய்ய வேண்டி திருப்பூா் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் இஸ்லாமியா்கள் 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

திருப்பூா்- அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஜன்னத்துல் பக்கி கபா்ஸ்தான் பள்ளிவாசல், அனுப்பா்பாளையம் மஸ்ஜிதே சித்திக் பள்ளிவாசல், காதா்பேட்டை பள்ளிவாசல், திருப்பூா்- மேட்டுப்பாளையம் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

இதேபோல, காங்கயம் அல்-அமீன் பள்ளி வாசல், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com