வெங்காய ஏற்றுமதி தடை நீக்கத்துக்கு வரவேற்பு

வெங்காய ஏற்றுமதி தடை நீக்கத்துக்கு உழவா் உழைப்பாளா் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவா் செல்லமுத்து கூறியதாவது: வறட்சியான இந்தக் காலகட்டத்தில்கூட வெங்காயம் பயிரிட்டு, உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினை உழவா் உழைப்பாளா் கட்சி வரவேற்கிறது.

அதேநேரத்தில் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் தென்னை விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, தேங்காய்களை மத்திய அரசு கொள்முதல் செய்து எண்ணெய்யாக மாற்றி, நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமும், கிராமப்புற பொருளாதாரமும் மேம்பாடு அடையும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com