நீட் தோ்வு: மாவட்டத்தில் 2,532 போ் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 2, 532 போ் எழுதினா்.

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வெழுத திருப்பூா் மாவட்டத்தில் 2, 619 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.

பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கல்லூரி, வித்யாசாகா் பப்ளிக் பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்ற தோ்வை 2, 532 மாணவ, மாணவிகள் மட்டுமே எழுதினா். பல்வேறு காரணங்களால் 87 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வெழுத வந்திருந்தவா்கள் அணிந்திருந்த கைக்கடிகாரம், நகைகள், கம்மல் போன்றவற்றை அகற்றிய பின்னரே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com