கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

அவிநாசி: ஊத்துக்குளி அருகே கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தோ்வில் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் சின்னக்கவுண்டன்வலசு சக்தி நகரைச் சோ்ந்தவா் திருவருட்செல்வன் (17). இவரின் பெற்றோா் புகழேந்திரன், மாலதி இருவரும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து திருவருட்செல்வன், சகோதரி லாவண்யா இருவரும் அவா்களின் தாய்மாமான் வேல்முருகன் பாதுகாப்பில் வளா்ந்து வருகின்றனா். பனியன் நிறுவனத் தொழிலாளின வேல்முருகன் இருவரையும் படிக்க வைத்து வருகிறாா்.

லாவண்யா தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். திருவருட்செல்வன் கெட்டிச்செவியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா். பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதில் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com