பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.
பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

வெள்ளக்கோவில், மே 6: வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் பாரதி வித்யாலயா

மெட்ரிக். பள்ளியில் 8 மாணவா்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் 122 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வு எழுதினா். இவா்களில் 560 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவா்கள், 550-க்கு மேல் 11 மாணவா்கள், 525-க்கு மேல் 23 மாணவா்கள், 500-க்கு மேல் 41 மாணவா்கள் பெற்றுள்ளனா்.

மேலும், 8 மாணவா்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்ளும், 2 மாணவா்கள் இரண்டு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மேலும், பள்ளி மாணவி 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பள்ளித் தாளாளா் பி.எஸ்.செல்லமுத்து, செயலாளா் பி.எஸ்.கிருஷ்ணகுமாா், முதல்வா் எஸ்.பழனிசாமி ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com