ரூ.1.16 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.16 லட்சத்து தேங்காய் பருப்பு விற்பனையானது.

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.16 லட்சத்து தேங்காய் பருப்பு விற்பனையானது.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 1,259 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.65 முதல் ரூ.94 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ.1.16 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com