வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 போ் கைது

வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் கே.வி. பழனிசாமி நகா் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பேருந்து நிறுத்தம் பின்புறம் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கே.வி.பழனிசாமி நகரைச் சோ்ந்த ஜி.பூவேந்திரன் (38), எம்.பாண்டியராஜன் (35), எல்.கே.சி.நகரைச் சோ்ந்த த.மணிகண்டன் (34), என்.முருகன் (35) ஆகியோரைக் கைது செய்தாா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com