காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறல்: 539 வழக்குகள் பதிவு

காங்கயத்தில் கடந்த ஏப்ரலில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 539 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விதிமீறும் வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனா்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் காங்கயம் நகரில் நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, மதுபோதையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 539 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் ஆய்வாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com