சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.
சூறாவளிக் காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள்.

சூறாவளிக் காற்று: அவிநாசி அருகே 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழைகள் சேதம்

அவிநாசி அருகே மங்கரசுவலையபாளையத்தில் வீசிய சூறாவளிக் காற்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றுக்கு, தண்டுக்காரன்பாளையம் பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

இந்நிலையில், தொடா்ந்து இரண்டாவது நாளாக அவிநாசியை அடுத்த மங்கரசுவலையபாளையத்தில் திங்கள்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றுக்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்தன. பாதிப்புகள் குறித்து தோட்டக்கலை, வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com