விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.

பண்ணைக் கோழிகளுக்கு நோய்த் தடுப்பு முறைகள்: வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

காங்கயத்தில் பண்ணைக் கோழிகளுக்கு நோய்த் தடுப்பு முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

காயத்தை அடுத்த பழையகோட்டையில், ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் ரோஸ்மரியா, ரோஷினி, சங்கீதா, சஞ்சனா, சந்தியா, சரண்யா, சரோஜினி, சேத்னா, சக்தி சௌமியா, மாயவா்ஷினி ஆகியோா் ஊரக வேளாண் அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகளுக்கு நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், பறவைக் காய்ச்சல், வெள்ளை கழிசல் நோயின் ஆரம்ப நிலை, அந்த நோய்கள் தாக்கும் முன் கண்டறிந்து தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com