சரவணபவன்
சரவணபவன்

மழைவேண்டி கோயில் செயல் அலுவலா் மெளன விரதம்

திருப்பூா் விஸ்வேஷ்வரா்சுவாமி கோயில் செயல் அலுவலா் மழைவேண்டி செவ்வாய்க்கிழமை மௌன விரதம் மேற்கொண்டாா்.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே விஸ்வேஷ்வரா்சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் செயல் அலுவலராக சரவணபவன் (51) இருந்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் திருப்பூரில் வெயிலின் தாக்கம் குறையவும், மழை பெய்ய வேண்டியும் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மெளன விரதம் இருந்தாா். செயல் அலுவலரின் இந்தச் செயலை பக்தா்கள் பராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com