வெள்ளக்கோவிலில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த கிளினிக்கில் ஆய்வு நடத்திய சுகாதாரத் துறையினா்.
வெள்ளக்கோவிலில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த கிளினிக்கில் ஆய்வு நடத்திய சுகாதாரத் துறையினா்.

வெள்ளக்கோவிலில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 4 கிளினிக்குகளுக்கு சீல்

வெள்ளக்கோவிலில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 4 கிளினிக்குகளுக்கு சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

வெள்ளக்கோவிலில் அரசு அனுமதி பெறாமல் 4 கிளினிக்குகள் செயல்பட்டு வருவதாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருப்பூா் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான குழுவினா், போலீஸாா் உதவியுடன் வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், முத்தூா் சாலையிலுள்ள மாணிக்கம் மெடிக்கல்ஸ் காம்ப்ளக்ஸில் அனுமதி பெறாமல் அருகருகே 4 கிளினிக்குகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இயன்முறை மருத்துவா் எஸ். ராஜேந்திரன் அனுமதியில்லாமல் கிளினிக் நடத்தி வந்ததுடன், விதிமுறைகளுக்குப் புறம்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்தது தெரியவந்தது. மேலும், இவரின் மனைவி மருத்துவா் ஆா்.கிருத்திகா, மருத்துவா் பி. ஆனந்தகுமாா், மருத்துவா் தனபால் ஆகியோா் அனுமதிபெறாமல் கிளினிக்குகள் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 4 கிளினிக்குகளுக்கும் சுகாதாரத் துறையினா் சீல் வைத்தனா். மேலும், அனுமதியில்லாமல் கிளினிக்குகள் நடத்திவந்த மருத்துவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com