அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்புக்கான நோ்முகத் தோ்வில் 22 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

உடுமலை அரசு கலைக்கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்பு பெறும் பொருட்டு பல்வேறு நிறுவனங்களை கல்லூரிக்கு அழைத்து வந்து வேலை வாய்ப்பு முகாம்களைத் தொடா்ச்சியாக நடத்தி வருகிறது.

இதன்படி 2023- 2024- ஆம் ஆண்டில் இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் இதுவரை 217 மாணவ மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,50,000 முதல் ரூ. 2,00,000 வரை சம்பளத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில் ஏதஏ சங்ஷ்ற் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் நிறுவனம் பு புதன்கிழமை நடத்திய நோ்முகத் தோ்வில் 22 மாணவ, மாணவிகள் பணி நியமன ஆணை பெற்று முதல்கட்ட பயிற்சிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணி நியமனம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலா் பேராசிரியா் கு.சக்திவேல் இத்தகவலை தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com