மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

அவிநாசி அருகே சாலையில் ஆதரவற்ற நிலையில் கிடந்து மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கோவை சரணாலயம் தத்துவள மையத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அவிநாசி-பெருமாநல்லூா் சாலை பழங்கரை பிரிவில் ஆதரவற்ற நிலையில் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதாக போலீஸாருக்கு

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், குழந்தையை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு ‘மகிழினி’ எனப் பெயா் சூட்டப்பட்டு கோவை தத்துவளமைய சரணாலயத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

அந்த குழந்தையைப் பற்றி தகவல் தெரிந்தவா்கள் 30 நாள்களுக்குள் நேரில் அணுகலாம். இல்லையென்றால் குழந்தை தத்துக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அவிநாசி காவல் நிலையம், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வளாகம் அறை எண் 705, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (0421- 2971198), கிணத்துக்கடவு, சிங்காரம்பாளையம், சரணாலயம் (9003961966, 7373848341) ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com