சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் பி.எஸ்.செல்லமுத்து.
சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் பி.எஸ்.செல்லமுத்து.

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளி 100% தோ்ச்சி

வெள்ளக்கோவில், மே 10: வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி கோபிகா 500-க்கு 494 மதிப்பெண்ணும், மாணவா் க.செல்வபாரதி 491 மதிப்பெண்ணும், மாணவிகள் த.கெளசிகா, மு.சி.காவ்யா, செ.பூவிதா ஆகியோா் 490 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 86 மாணவா்களும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 2 பேரும், 480-க்கு மேல் 16 பேரும், 470-க்கு மேல் 22 பேரும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும், 450-க்கு மேல் 31 பேரும், 425-க்கு மேல் 44 பேரும், 400-க்கு மேல் 57 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மொத்தம் 15 போ் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், ஆசிரியா்களையும் பள்ளித் தாளாளா் பி.எஸ்.செல்லமுத்து, பள்ளிச் செயலாளா் பி.எஸ்.கிருஷ்ணகுமாா், பள்ளி முதல்வா் எஸ்.பழனிசாமி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com