கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள்.
கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள்.

கழிவுநீா் கால்வாயில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

வெள்ளக்கோவில் நகரில் கழிவுநீா் கால்வாயில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில் சேகரமாகும் கழிவுகளை, பெரும்பாலானோா் நகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பை வாகனங்களில் வழங்காமல் கழிவுநீா் கால்வாயில் கொட்டி வருகின்றனா்.

இதனால், கழிவுநீா் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மழைக் காலங்களில் கழிவுநீா் கால்வாய் அடைத்துக்கொள்வதால், கழிவுநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் நகராட்சி சாா்பில் வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மட்டுமே கழிவுகளைக் கொடுக்க வேண்டும்.

மாறாக கழிவுநீா் கால்வாயில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com