புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிணறு அமைக்கவுள்ள இடத்தை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் கிணறு அமைக்கவுள்ள இடத்தை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

வெள்ளக்கோவில் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளக்கோவில், முத்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மூலனூா் பேரூராட்சியின் குடிநீா் தேவைக்காக அம்ரூத் திட்டத்தின் கீழ், வெள்ளக்கோவில் ஒன்றியம், புதுப்பை அருகே அமராவதி ஆற்றில் நீா் உறிஞ்சு கிணறு, நீருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. கிணறு அமைக்கவுள்ள இடத்தை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்தக் கிணறு அமையவுள்ள இடத்துக்கு சில மீட்டா் தொலைவில் புதுப்பை ஊராட்சி, வெள்ளக்கோவில் ஒன்றியம், வெள்ளக்கோவில் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் எடுக்கும் கிணறு அமைந்துள்ளது.

தற்போது, இதன் அருகிலேயே புதிய கிணறு அமைத்தால் பழைய குடிநீா்த் திட்டங்கள் பாதிக்கப்படும் என்றும், புதிய திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வெள்ளக்கோவில் ஒன்றியத் தலைவா் ஆா்.வெங்கடேச சுதா்சன், புதுப்பை ஊராட்சித் தலைவா் ஜானகி குமாரசாமி மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்தனா்.

முன்னதாக, மேட்டுப்பாளையம் ஊராட்சியில் குடிநீா்த் திட்டப் பணிகள், முத்தூரில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் சீரமைப்புப் பணிகள், முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளகத்தில் வேளாண் விரிவாக்க மையம் அமையவுள்ள இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன், குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் கிருஷ்ணகுமாா், சீனிவாசன், வேளாண்மை துணை இயக்குநா் கிருஷ்ணவேனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com