வாழையைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.
வாழையைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்.

வாழையில் நோய்க் கட்டுப்பாடு: வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

வாழையில் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா்.

காங்கயத்தை அடுத்த முள்ளிப்புரத்தில், ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே.முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, வாழையைத் தாக்கும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். மேலும், வாழை மரங்களில் தெளிப்பதற்கு இயற்கை முறையில் மைதா கரைசல் தயாரித்தல், அதனை பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com