அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.

வெள்ளக்கோவில் ஜெயம் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

வெள்ளக்கோவில் ஜெயம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி என்.நந்தினி 495 மதிப்பெண்களும், மாணவா்கள் கே.அபிஷேக், எஸ்.தா்ஷனா 494 மதிப்பெண்களும், மாணவா் எம்.ஹரி ராகவேந்திரன் 493 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். மேலும், 11 மாணவா்கள் பல்வேறு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தாளாளா் செ.குப்புசாமி, பள்ளியின் கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஆா்.அன்புச்செல்வி, செயலாளா் ஜி.இளமதி, பொருளாளா் வி.சக்திவடிவேல் மற்றும் முதல்வா், ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com