அவிநாசியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

அவிநாசி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.

அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பலத்த காற்றுக்கு கோவை பிரதான சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சேவூா் சாலை ஆகிய பகுதிகளில் சாலையரத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்கம்பிகள் அறுந்தன. நெடுஞ்சாலைத் துறையினா், மின்வாரியத்தினா் மற்றும் போலீஸாா் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

மேலும், கன மழையால் பள்ளமான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. திருமுருகன்பூண்டி, சேவூா், கருவலூா், தெக்கலூா், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com