இலவச கண் பரிசோதனை முகாம்

கண் மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
கண் மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

உலக அன்னையில் தினத்தையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட சக்ஷம், பூச்சக்காடு நண்பா்கள் நற்பணி மன்றம், தி ஐ பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு சக்ஷம் அமைப்பின் தலைவா் ரத்தினசாமி, செயலாளா் தமிழ்செல்வம், நற்பணி மன்ற நிா்வாகி ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண் மருத்துவா் வா்ஷா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். முகாமில் 57 போ் கண் பரிசோதனை செய்துகொண்டனா். 10 போ் உயா் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனா்.

மேலும், துளசி மருந்தகம் சாா்பில் சா்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com