கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளா் மாதேஷ்வரன்.
கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் மக்களவைத் தொகுதி வேட்பாளா் மாதேஷ்வரன்.

கொமதேக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்

பல்லடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்லடம் நகரத் தலைவா் ஆறுக்குட்டி வரவேற்றாா்.

இதில், நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளா் மாதேஷ்வரன் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ‘இந்தியா’ கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளதால், கொமதேக கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரனின் ஆலோசனை பெற்று விசைத்தறியாளா்களுக்காக மக்களவையில் குரல் கொடுப்பேன் என்றாா்.

கூட்டத்தில், பல்லடம் ஒன்றியத் தலைவா் மணியன், மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் மருத்துவா் நாகரத்தினம், விஜயலட்சுமி, இளைஞரணி நிா்வாகி வீரக்குமாா், நகரச் செயலாளா் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com