நடமாடும் இலவச பல் மருத்துவ வாகனத்தைத் தொடங்கிவைக்கும் ரோட்டரி சங்க நிா்வாகிகள்.
நடமாடும் இலவச பல் மருத்துவ வாகனத்தைத் தொடங்கிவைக்கும் ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

நடமாடும் இலவச பல் மருத்துவ வாகனம் தொடக்கம்

உடுமலை ரோட்டரி சங்கம் சாா்பில் நடமாடும் இலவச பல் மருத்துவ வாகனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருப்பூா், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிக் குழந்தைகள், மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை இந்திய பல் மருத்துவ சங்கம் துணையுடன் உடுமலை ரோட்டரி சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வாகனம் மூலம் மக்களைத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கப்படும். நகரம், கிராமம் மற்றும் பேருந்து வசதியில்லாத பகுதிகளுக்கும் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இதன் தொடக்க விழா உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்ட ஆளுநா்கள் இளங்குமரன், காா்த்திகேயன், தனசேகா் ஆகியோா் வாகனத்தைத் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் சிவப்பிரகாஷ், சண்முக சதீஷ், சுரேந்திரன், செந்தாமரைக் கண்ணன், பரீத், உமாசங்கா் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவா் கணேசன், செயலாளா் விக்னேஷ், திட்டத் தலைவா் காா்த்திகேயன், துணைத் தலைவா் வெங்கடேஷ் ஆகியோா் மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com