ஊராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில்  ஈடுபட்ட பொது மக்கள்.
ஊராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில்  ஈடுபட்ட பொது மக்கள்.

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி: அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியம், நடுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட வலையபாளையத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜி காா்டன் உருவாக்கப்பட்டு வீட்டுமனைகள் விற்கப்பட்டன. இங்கு, தற்போது 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீட்டுமனைகளுக்கு டிடிசிபி அனுமதி பெறாததால் குடிநீா் இணைப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.

மேலும், வீட்டுமனை விற்பனையாளா்கள் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமல் இருந்ததால் மின்மோட்டருக்கான இணைப்பும் பெற முடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் நடுச்சேரி ஊராட்சி அலுவலக்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே வீட்டுமனை விற்பனையாளா்கள் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தினா்.

இதையடுத்து குடிநீா், தெருவிளக்கு பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காணப்படும் என்று ஊராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com