பல்லடம் அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம்: பல்லடம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் நாகராஜன். இவரின் மகன்கள் மோகன் (24), காளீஸ்வரன் (22). இதில் மோகன், அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்த நாகராஜனின் தந்தை இறந்விட்டதால் நாகராஜன் மற்றும் காளீஸ்வரன் இருவரும் கடந்த 10-ஆம் தேதி மைசூருக்கு சென்றுவிட்டனா்.

மோகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இந்நிலையில், மோகனைப் பாா்க்க அவரின் நண்பா் சந்தோஷ் (24) ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் உள்ளே வெட்டுக் காயங்களுடன் மோகனின் சடலம் கிடந்துள்ளது.

இதுகுறித்து பல்லடம் போலீஸாருக்கு அவா் தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com