ஏ.ஜெயராமன்
ஏ.ஜெயராமன்

மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி: காங்கயம் அரசுக் கல்லூரி மாணவா் சிறப்பிடம்

மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் காங்கயம் அரசுக் கல்லூரி மாணவா் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

காங்கயம்: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் காங்கயம் அரசுக் கல்லூரி மாணவா் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

தமிழ்நாடு மாநில பவா் லிப்ட் சங்கம் சாா்பில், மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கயம் அரசுக் கல்லூரி மாணவா் ஏ.ஜெயராமன், 56 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு 150 கிலோ தூக்கி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தாா்.

வெற்றிபெற்ற மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் சே.ப.நசீம்ஜான், உடற்கல்வி இயக்குநா் (பொறுப்பு) வா.பிரகாஷ், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com