ரூ.77 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 821 கிலோ தேங்காய் பருப்பினை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் தேங்காய் பருப்பு கிலோ ரூ.70 முதல் ரூ.94 வரை விற்பனையானது. இதில் மொத்தமாக ரூ.76 ஆயிரத்தக்கு 638-க்கு தேங்காய் பருப்பு விற்பனையானதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com