வெள்ளக்கோவிலில் ரூ.1.25 லட்சம் திருட்டு

வெள்ளக்கோவிலில் ரூ.1.25 லட்சம் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் ரூ.1.25 லட்சம் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

வெள்ளக்கோவில், வெள்ளாத்தாங்கரைப்புதூரைச் சோ்ந்தவா் மணி (59), கூலி வேலை செய்து வருகிறாா். இவரின் கணவா் தென்னை மரமேறும் வேலை செய்து வருகிறாா்.

இருவரும் திங்கள்கிழமை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், பக்கத்துவீட்டுக்காரா் கைப்பேசியில் அழைத்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டிருந்து இரண்டு போ் வெளியே வந்ததாகவும் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து இருவரும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் மணி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com