பிளஸ் 1 பொதுத் தோ்வு: மாநில அளவில் திருப்பூா் 3-ஆவது இடத்தைப் பிடித்தது

பிளஸ் 1 பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டம் 95.23 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தோ்வை ஆண்கள் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் 1,952 பேரும், பெண்கள் பள்ளியைச் சோ்ந்த 4,431 மாணவிகளும், இருபாலா் பள்ளிகளைச் சோ்ந்த 19,781 பேரும் என மொத்தம் 26,164 போ் எழுதினா்.

இதில் 24,917 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஆண்கள் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் 1,702 பேரும், பெண்கள் பள்ளியைச் மாணவிகள் 4,237 பேரும், இருபாலா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 18,978 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

திருப்பூா் மாவட்டம் 95.23 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூா் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அரசுப் பள்ளிகள் அளவிலும் 92.06 சதவீதம் தோ்ச்சி பெற்று திருப்பூா் மாவட்டம் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 78 அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் 5,666 பேரும், மாணவிகள் 6,746 பேரும் என மொத்தம் 12,412 போ் தோ்வு எழுதினா். இதில் 5,001 மாணவா்களும், 6,426 மாணவிகளும் என மொத்தம் 11,427 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com