பூட்டிய வீட்டில் 4.5 பவுன் நகை திருட்டு

திருப்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4.5 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா், மங்கலம் சாலை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் சுகுணா (54). இவரது கணவா் பழனிசாமி, கடந்த வாரம் உயிரிழந்தாா். இதையடுத்து, சடங்குகள் செய்ய வீட்டை பூட்டிவிட்டு சுகுணா சொந்த ஊரான சென்னிமலைக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினா் சுகுணாவுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் சுகுணா வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4.5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சுகுணா அளித்த புகாரின்பேரில், திருப்பூா் மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com