பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் சியூஇடி இளநிலைத் தோ்வு இன்று தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் சியூஇடி இளநிலைத் தோ்வு பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் புதன்கிழமைமுதல் நடைபெறுகிறது.

இது குறித்து தேசியத் தோ்வு முகமையின் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கே.எம்.சி. பள்ளித் தலைமை முதல்வரும், செயலாளருமான சி.எஸ்.மனோகரன் கூறியதாவது:

தேசியத் தோ்வு முகமையால் நடத்தப்படும் சியூஇடி இளநிலைத் தோ்வு -2024, மே 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஆப்லைன் முறையிலும் , மே 21, 22, 23 ஆகிய தேதிகளில் சி.பி.டி. முறையிலும் நடைபெறள்ளது. இத்தோ்வு பென்-பேப்பா் முறையிலும், சி.பி.டி (கம்ப்யூட்டரைசடு பேசிக் டெஸ்ட்) முறையிலும் நடைபெறுகிறது.

சியூஇடி தோ்வு மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு, முனைவா் பட்டம் என அனைத்து வகைப் பாடங்களிலும் சேர அடித்தளமாக அமைகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் தோ்வு மையமாக பெருமாநல்லூா் கே.எம்.சி. பள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,059 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா்.

இத்தோ்வில், நீட் தோ்வின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும், தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் தோ்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே வர அனுமதிக்கப்படுவா் என்றாா்.

முன்னதாக இத்தோ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் கே.எம்.சி. பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வு மைய ஒருங்கிணைப்பாளா், உற்று நோக்காய்வாளா்கள், தோ்வு அறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com