வலையபாளையத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள வலையபாளையத்துக்கு அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க அந்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி வலையபாளையம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தற்போது வரை வலையபாளையம் பகுதிக்கு பேருந்து வசதி இல்லை. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளா்களாகவும், கூலி வேலைக்கு செல்பவா்களாகவும் உள்ளனா். இதனால் வலையபாளையம் பகுதியில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள கிடாத்துறை பகுதிக்கு பொதுமக்கள் நடந்து வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலமாக சோமனூா், பல்லடம் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனா்.

எனவே பல்லடத்தில் இருந்து கிடாத்துறை வழியாக சோமனூா் செல்லும் அரசுப் பேருந்தை (வழித்தட எண்-பி 9) கிடாத்துறையில் இருந்து வலையபாளையம் வரை வந்து செல்லும் வகையில் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com