300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

அவிநாசி அருகே 300 புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் வியாபாரியை கைது செய்தனா்.

அவிநாசி அருகே சென்னிமலைகவுண்டன்புதூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த முத்தலிப் மகன் இக்பால் (41) என்பதும், அவா் விற்பனை செய்வதற்காக அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இக்பாலைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 300 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய தா்வேஷ், ஜெயிலாபுதீன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com