‘அனுமதியின்றி வாகனங்களில் கியாஸ் என்ஜின்களை மாற்றக்கூடாது’

வாகனங்களில் கியாஸ் என்ஜின்களை உரிய அனுமதிபெற்ற பின்னரே மாற்ற வேண்டும் என்று திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து பல்லடத்தில் அவா் புதன்கிழமை கூறியதாவது:

திருப்பூரில் சமீபகாலமாக வாகனங்கள் தானாக தீப்பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது தொடா்பாக மேற்கொண்ட ஆய்வில், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மூலம் வாகனங்களில் கியாஸ் என்ஜின்களை மாற்றம் செய்தது தெரியவந்தது.

இதனை கண்காணிக்க அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு சென்னையில் தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாகனங்களில் கியாஸ் என்ஜின்களை மாற்றம் செய்யும்போது சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிபெற்ற பின்னரே மாற்ற வேண்டும். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com