எம்-வேளாண்மை செயலி குறித்து மாணவிகள் விழிப்புணா்வு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் பல்கலைக்கழகத்தின் எம்-வேளாண்மை செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பல்லடத்தை அடுத்த பொங்கலூா் பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதன் ஒருபகுதியாக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீா் நுட்பவியல் துறை, வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள எம்- வேளாண்மை செயலி குறித்து புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்தச் செயலியில் பயிா் பராமரிப்பு, கண்காணிப்பு, வழிகாட்டி, வானிலை, சந்தை தகவல் ஆகிய விவரங்களைப் பெறமுடியும் என்று தெரிவித்தனா்.

இச்செயலியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com