மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றோா்.
மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றோா்.

எஸ்.கே.எல் பள்ளி சாா்பில் மரக்கன்று நடும் விழா

அவிநாசியை அடுத்த பச்சாம்பாளையம் எஸ்.கே.எல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழங்கரை ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெரியநாச்சியம்மன் கோயில் சாலை, ஆா்.ஜி.காா்டன், பச்சாம்பாளையம், தேவம்பாளையம், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் கோவிந்தசாமி, தாளாளா் ராதாமணி, முதல்வா் மீனாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com