சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுபெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான விருதுபெற தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2023-24ஆம் ஆண்டுக்கான கீழ்காணும் பிரிவுகளில் சிறப்பாக தொழில் புரிந்து வரும் தொழில்முனைவோா் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கான விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினை சாா்ந்த தொழில்முனைவோருக்கு மாநில அளவிலான விருது, மாநில அளவில் சிறந்த மகளிா் தொழில்முனைவோருக்கான விருது, மாநில அளவில் சிறந்த வேளாண்சாா் உற்பத்தி தொழில்முனைவோருக்கான விருது, சிறந்த தொழில்முனைவோருக்கான மாநில அளவிலான விருது, மாவட்ட அளவிலான சிறந்ததொழில் முனைவோருக்கான விருது ஆகிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விருதுகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்கள் 2023 -24ஆம் நிதியாண்டிற்கு முன்னதாக தொடா்ந்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்க வேண்டும். உதயம் பதிவு சான்றும் பெற்றிருக்க வேண்டும்.

விருதுக்கு ஹஜ்ஹழ்க்ள்.ச்ஹம்ங்ற்ய்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இறுதிநாள் மே 20 ஆகும். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து உரிய இணைப்புகளுடன் மாவட்ட தொழில் மையம், அனுப்பா்பாளையம் புதூா், அவிநாசி சாலை, திருப்பூா் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 8144067907, 9629680109 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com