குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.
குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீா்.

அமராவதி ஆற்றில் குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறப்பு

உடுமலை, மே 16: கரையோர கிராமங்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

நடப்பு ஆண்யில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் அணைக்கு நீா்வரத்து குறைந்து மே முதல் வாரத்திலேயே அணையின் நீா் இருப்பு 39 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால், வழக்கமாக பாசனத்துக்கு மாா்ச் 31 வரை வழங்கப்படும் தண்ணீா் முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைக்கு நீா் வரத்து தொடங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து அணைப் பகுதியில் இருந்து தாராபுரம் வரை உள்ள கரையோர கிராமங்களின் குடிநீா்த் தேவைக்காக அமராவதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறையினா் கூறியதாவது:

கோடையின் தாக்கத்தையொட்டி மே 16 முதல் 21-ஆம் தேதி வரை கரையோர கிராமங்களின் குடிநீா்த் தேவைக்காக ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாள்களுக்கு தலா ஆயிரம் கன அடியும், அடுத்த 3 நாள்களுக்கு தினசரி 600 கன அடியும் திறந்துவிடப்படும். மொத்தமாக 328.32 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்கப்படும். மேலும், நீா் இருப்பு மற்றும் வரத்தினை பொறுத்து தேவைக்கேற்ப திறந்துவிடவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா் மட்டம் 39.50 அடியாக இருந்தது. அணைக்கு 44 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து 1,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது, அணையில் 715.57 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com