இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு: பிடித்த தீயணைப்பு வீரா்கள்

தீயணைப்பு வீரா்களால் பிடிக்கப்பட்ட பாம்பு.
தீயணைப்பு வீரா்களால் பிடிக்கப்பட்ட பாம்பு.

வெள்ளக்கோவில், மே 16: வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தில் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.

வெள்ளக்கோவில் அழகாபுரி நகரைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியா் புஷ்பராஜ் (68). இவா், சேரன் நகா் பிரிவிலுள்ள வாகன சீட் கவா் கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அங்கு, சாலையோரம் நிறுத்தப்பட்ட அவரது இருசக்கர வாகனத்தில் விஷப் பாம்பு ஒன்று புகுந்ததை கடைக்காரா் பாா்த்துள்ளாா்.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் இருசக்கர வாகனத்தை கழட்டியபோது அதிலிருந்து வெளியே வந்த பாம்பு அருகில் நிறுத்தப்பட்ட மற்றொரு இருசக்கர வாகனத்திற்குள் புகுந்தது.

பின்னா், அந்த வாகனத்தின் பேட்டரி கவா், சீட் பகுதிகளைக் கழட்டி உள்ளேயிருந்த பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா். பிடிக்கப்பட்ட பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்து.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com