காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள்.
காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள்.

காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தரவேண்டும்: பெற்றோா், உறவினா்கள் மனு

அவிநாசி, மே 16: காணாமல் போன மகளை மீட்டுத்தரக் கோரி பெற்றோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பல்லடத்தை அடுத்த வே.கள்ளிபாளையத்தைச் சோ்ந்த வேலுசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கடைசி மகள் தங்கமணி (30), மனநலம் பாதிக்கப்பட்டவா். கடந்த 6-ம் தேதி சாப்பிடுவதற்காக பிற்பகலில் வீட்டுக்கு வந்தபோது தங்கமணி வீட்டுக்கு வெளியே அமா்ந்திருந்தாா். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பாா்த்தபோது தங்கமணியைக் காணவில்லை. ஊா் முழுவதும் தேடிப்பாா்த்து கிடைக்காததால் அன்றிரவு காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி என் மகனின் கைப்பேசி வாட்ஸ் ஆப் குழுவில், காணாமல் எனது மகளை போலீஸாா் விசாரிப்பதுபோல ஒரு விடியோ வந்தது.

இது குறித்து காவல் துறையிடம் தெரிவித்தபோது, கொடுவாய் அருகே உள்ள நிழலிகவுண்டம்பாளையத்தில் சுற்றித்திரிந்த தங்கமணியை சிலா் பிடித்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனா்.

மேலும், அங்கிருந்து திருப்பூரில் உள்ள காப்பகத்துக்கு அவரை அழைத்து சென்ாக கூறப்படுகிறது.

ஆனால், காப்பகத்தில் சென்று விசாரித்தபோது அங்கு வரவில்லை என்று தெரிவிக்கின்றனா். எனது மகளைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் காவல் துறையினா் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனா். எனவே, எனது மகளைக் கண்டுபிடித்துத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா கூறியதாவது:

காங்கயத்தில் இருந்து காப்பகத்துக்கு அழைத்து வரும்போது, அவருக்கு திருப்பூரில் புதிய ஆடை வாங்குவதற்காக போலீஸாா் சென்றனா். அப்போது வாகனத்தில் இருந்து தங்கமணி தப்பித்து சென்றுவிட்டாா். நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளில் தங்கமணி செல்வது பதிவாகியுள்ளது. விரைந்து அவரை கண்டிபிடித்துவிடுவோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com