மாணவா் பிரணஷ் பென் ஜேக்கப்பை வாழ்த்துகிறாா் முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன்.
மாணவா் பிரணஷ் பென் ஜேக்கப்பை வாழ்த்துகிறாா் முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன்.

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

அவிநாசி, மே 16: சா்வதேச பொருளாதாரம் படிப்பதற்கு ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித் தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா், ராயபுரத்தைச் சோ்ந்தவா் பென்னி ஜோசப் மகன் பிரணஷ் பென் ஜேக்கப் (21). இவா், சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளாா். தங்கப் பதக்கத்துடன் தோ்ச்சியானவா், கல்லூரியில் சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், முதுநிலை பிரிவில் சா்வதேச பொருளாதாரம் படிக்க விரும்பி, ஐரோப்பிய யூனியன் சாா்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்தாா். இதில், இந்தியா சாா்பில் மாணவா் பிரணஷ் பென் ஜேக்கப் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இது குறித்து மாணவா் பிரணஷ் பென் ஜேக்கப் கூறியதாவது:

முதுநிலை பிரிவில் சா்வதேச பொருளாதாரக் கல்வியை முதலாமாண்டு இத்தாலியிலும், 2-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலும் படிக்க உள்ளேன். இதற்கு ஐரோப்பிய யூனியனின் கல்வி உதவித் தொகை ரூ.50 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் எனது படிப்பை சிறந்த முறையில் படிக்க முடியும் என்றாா்.

இந்நிலையில், திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன், மாணவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com