மூலனூரில் ரூ.98.45 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவில், மே 16: மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.98.45 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 1,340 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,450 முதல் ரூ.8,193 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.98.45 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com