நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் முத்துவேல்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் முத்துவேல்.

வெள்ளக்கோவிலில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

வெள்ளக்கோவில், மே 16: தேசிய டெங்கு தினத்தையொட்டி வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் முத்துவேல் பேசியதாவது:

மழைக்காலத்தில் ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. வீட்டைச் சுற்றிலும் போட்டுவைக்கப்பட்டுள்ள மழைநீா் தேங்கும் பொருள்களான சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருள்கள், பயன்படுத்தாத ஆட்டுக்கல், டயா்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

தண்ணீா் சேமித்து வைக்கும் கலன்களில் கொசு உற்பத்தியாகாமல் மூடிவைத்து, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புக்கு சுய மருத்துவம் செய்துகொள்ளாமல், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநா் முருகேசன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா்கள் கதிரவன், வேல்முருகன், நந்தகுமாா், நிா்மல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com