திருப்பூர்
பொங்கலூரில் நவ. 22இல் மின்தடை
பொங்கலூா் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்
பொங்கலூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொங்கலூா், காட்டூா், தொட்டம்பட்டி, மாதப்பூா், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூா், என்.என்.புதூா், வடக்கு அவிநாசிபாளையம், காங்கயம்பாளையம் மற்றும் ஓலப்பாளையம்.