காங்கயத்தில் வழக்குரைஞா்கள்
 சங்க அமைப்புக் கூட்டம்

காங்கயத்தில் வழக்குரைஞா்கள் சங்க அமைப்புக் கூட்டம்

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் காங்கயம் கிளை அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் காங்கயம் கிளை அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வழக்குரைஞா் சி.கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பொன்ராம், திருப்பூா் மாவட்டச் செயலாளா் பி.மோகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா்.

இதைத் தொடா்ந்து, அகில இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் காங்கயம் கிளைத் தலைவராக பி.சந்திரன், துணைத் தலைவராக கே.பன்னீா்செல்வம், செயலாளராக என்.நவீன், துணைச் செயலாளராக எம்.மோகனப்பிரியா, பொருளாளராக டி.விக்ரம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் வழக்குரைஞா்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும், நீதிமன்ற ஊழியா்களின் குழந்தைகளுக்காக நீதிமன்ற வளாகத்தில் காப்பகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவி சௌபா்ணிகா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com