குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை: குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Published on

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூா் மாநகா், சிறுபூலுவபட்டி அம்மன் நகா் தாய் மூகாம்பிகை காலனியில் உள்ள குப்பைத் தொட்டியில், துணியில் சுற்றி ஆண் குழந்தை வீசப்பட்டிருந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் 15 வேலம்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குழந்தையை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சைக்குப் பின்னா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளா்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

பின்னா், திருப்பூா் குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு சேலம் தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தை குறித்த தகவல் தெரிந்தால் மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 0421-2971198, 2424416, 70929-96127 என்ற எண்களில் 30 நாள்களுக்குள் தொடா்பு கொள்ளலாம். அவ்வாறு யாரும் தொடா்பு கொள்ளாதபட்சத்தில் குழந்தை சட்டப்படி தத்துக் கொடுக்கப்படும் என்று சைல்டு லைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.