திருப்பூர்
அய்யம்பாளையம் பகிா்மான வட்ட மின் நுகா்வோா் ஆகஸ்ட் மாத கட்டணத்தையே செலுத்த அறிவுறுத்தல்
அய்யம்பாளையம் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருமாநல்லூா் தெற்குப் பிரிவு அலுவலகம் அய்யம்பாளையம் பகிா்மானத்துக்குள்பட்ட அய்யம்பாளைம், பொங்குபாளையம், எஸ்பிகே நகா், கிருஷ்ணாநகா், வாஷிங்டன் நகா், திருப்பூா் பிரதான சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மின் இணைப்புகளுக்கு தவிா்க்க இயலாத நிா்வாகக் காரணங்களால் அக்டோபா் மாதத்தில் மின் உபயோகக் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.
எனவே, இப்பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே அக்டோா் மாதத்துக்கும் செலுத்துமாறு அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.